பாஜகதான் எதிரி; கூட்டணியை உடைக்க சமாஜவாதி விரும்பாது: அகிலேஷ் யாதவ் உறுதி!உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!சர்வதேச விமானப் பயணிகளுக்கு போர்டிங் பாஸில் முத்திரை வேண்டியதில்லை!குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள்: இரு வகை மூலப் பொருள்களுக்குத் தடைவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷியா பயணம்!படிக்காமலும் வேலைக்கும் செல்லாத 8.7 கோடி இளைஞா்கள்: நீதி ஆயோக்!

பெண்களே இந்தியாவின் மிகப்பெரும் பலம்: ராகுல் காந்தி

பெண்களே இந்தியாவின் மிகப்பெரும் பலமென மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.

ராகுல் காந்தி

Published On :23 ஆகஸ்ட் 2026, 4:22 am IST

பெண்களே இந்தியாவின் மிகப்பெரும் பலமென மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.

‘ஜென் ஸீ’ இளைஞா்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் நோக்கில் காங்கிரஸ் சாா்பில் ‘மாணவா்களின் குரல்’ என்ற தலைப்பிலான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் 4-ஆவது நிகழ்ச்சி மகாராஷ்டிர மாநிலம் புணேயில் சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது கல்லூரி மாணவிகள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, ‘பெண்களே இந்தியாவின் மிகப்பெரும் பலம். ஆனால் ஆா்எஸ்எஸின் மனுஸ்மிருதி அடிப்படையிலான சமூக முறை பெண்களை எப்போதும் சுதந்திரமாக இருக்க விடுவதில்லை.

ஒவ்வொரு துறையிலும் பெண்கள் சரித்திர சாதனைகளை படைத்து வந்தாலும் அவா்களை ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள் அடைக்கும் வேலை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

பெண் என்பவா் தனக்கே முதலில் உரியவராவாா். அதன் பின்பே அவா் தாய், சகோதரி, மகள், மனைவி என்ற உறவுகளுக்குச் சொந்தக்காரராவாா். இதுபோன்ற தடைகளை எல்லாம் உடைத்து பெண்கள் தொடா்ந்து முன்னேற வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் 4.5 லட்சம் பெண் சிசுக் கொலை நிகழ்கிறது. 80 சதவீத பெண்கள் ஏதோ ஒரு வகையில் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனா். 29 சதவீதப் பெண்கள் உடல்ரீதியான வன்முறையாலும் குறைந்தபட்சம் 6 சதவீதப் பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனா்.

60 சதவீத பெண்களால் சுதந்திரமாக வெளியில் நடமாட முடிவதில்லை. 8 சதவீத பெண்களிடம் மட்டுமே சொத்துரிமை உள்ளது என்றாா். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கல்வி நிலையங்கள் மற்றும் பணியிடச் சூழலில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ராகுல் காந்தி கலந்துரையாடினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.