புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய முயற்சியா? காங்கிரஸ் கேள்வி

தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறதா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது பற்றி...

Jairam Ramesh

ஜெய்ராம் ரமேஷ் - கோப்புப்படம்

Published On :

தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறதா? என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆக. 13 ஆம் தேதி வரை நடைபெற்றது. கூட்டத் தொடர் நிறைவு நாளின்போது, நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு இதுவரை, 10 நாள்கள் கடந்தும் அதுகுறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனவே, தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் தாக்கல் செய்ய உள்ளத்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படுவதற்கான கால இடைவெளி பொதுவாக இரண்டு முதல் நான்கு நாள்கள் ஆகும். இருப்பினும், ஒத்திவைத்த அதே நாளில் நடைபெற்ற பல நிகழ்வுகளும் உள்ளன.

இதுவரை, 10 நாள்கள் கடந்தும் கூட்டத்தொடர் குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், 28 நாள்கள் ஒத்தி வைத்ததும், 2021 இல் 20 நாள்கள் ஒத்திவைத்த நிக்ழ்வும் நடைபெற்றது உண்மைதான். ஆனால் அப்போது எந்த சூழ்ச்சியும் நடைபெறவில்லை.

இந்த கால தாமதத்துக்கான காரணம் என்ன? தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதற்கான மூன்றில் ஒரு பங்கு ஆதரவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறாரா? என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Summary

Congress leader Jairam Ramesh questioned on Sunday (Aug. 23) whether the Central government is attempting to reintroduce the delimitation bill.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.