மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! ஜார்க்கண்ட் போராட்டம்: 900 பேர் மீது வழக்குப்பதிவு!சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! 2ஆவது டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா பதிலடி

மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!

மகாராஷ்டிரத்தில் ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது பற்றி....

Maharashtra: Helicopter makes emergency landing near lake in Bhandara

ஹெலிகாப்டர் - கோப்புப்படம்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 4:54 pm IST

மகாராஷ்டிரத்தில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் ஒன்று ஏரிக்கு அருகே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் நான்கு பேருடன் நாக்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தது. அப்போது மோசமான வானிலை காரணமாக பிசாரி ஏரிக்கு மேலே சிறிது நேரம் வட்டமடித்த ஹெலிகாப்டர், ஏரிக்கு அருகிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மொஹாடி தாலுகாவில் உள்ள மொஹ்கான்-நிலாஜ் சாலைக்கு அருகே நடந்த இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏரியில் தற்போது நீர்மட்டம் குறைவாக இருப்பதால் அப்பகுதியில் பரந்த திறந்தவெளி காணப்படுவதாகவும், அந்த இடத்தையே ஹெலிகாப்டரைத் தரையிறக்க விமானி தேர்வு செய்ததாகவும் அதிகாரிகள் மேலும் கூறினர்.

சுமார் ஒரு மணி நேரம் நின்ற பிறகு, வானிலை சீரடைந்ததும் ஹெலிகாப்டர் மீண்டும் நாக்பூருக்குப் புறப்பட்டுச் சென்றது. "ஹெலிகாப்டரில் நான்கு பேர் பயணம் செய்தனர், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்," என்று மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி அபிஷேக் நாம்தாஸ் தெரிவித்தார்.

கோண்டியாவில் உள்ள பிர்சி விமான நிலையத்தின் இயக்குனர் கிரிஷ் சந்திர வர்மா கூறுகையில், விமானி தங்கள் விமான நிலையத்தில் தரையிறங்க விரும்புவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது, ஆனால் பின்னர் அவர் நாக்பூருக்கே திரும்பிச் செல்ல முடிவு செய்தார் என்றார்.

Summary

A helicopter with four persons on board made an emergency landing near a lake after bad weather affected visibility in Maharashtra's Bhandara district on Sunday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.