மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

புதிய வகை எச்1என்1 காய்ச்சல் வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை; அச்சப்படத் தேவையில்லை: ஐசிஎம்ஆர் விளக்கம்

பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் புதிய வகை எச்1என்1 காய்ச்சல் வைரஸ் எதுவும் தற்போது கண்டறியப்படவில்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது குறித்து...

No new H1N1 strain identified

புதிய வகை எச்1என்1 காய்ச்சல் வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை - ஐசிஎம்ஆர்

Published On :23 ஆகஸ்ட் 2026, 9:58 pm IST

புதுதில்லி: நாட்டில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் புதிய வகை எச்1என்1 காய்ச்சல் வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போது பரவி வரும் பருவகால இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வகைகள், புவியின் வடஅரைகோளத்தில் பருவ காலங்களில் வழக்கமாக பரவும் வகைகளாகும். இவை, தற்போதைய பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி வகைகளுக்கு கட்டுப்படக் கூடியவையே. இந்த வைரஸ்கள் 2025-ஆம் ஆண்டு முதலே புழக்கத்தில் உள்ளன ஐசிஎம்ஆர்-இன் மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, எச்1என்1 உள்ளிட்ட பருவகால இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் பெரும்பாலும் தானாகவே குணமாகக்கூடியவை. காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் உடல் வலி ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்; முறையான பராமரிப்பு மற்றும் ஓய்வு மூலம் பெரும்பாலானோர் குணமடைகின்றனர். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே ஏதேனும் உடல்நலப் பாதிப்புகள் உள்ளவர்களுக்குச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம். அறிகுறிகள் நீடித்தாலோ, மோசமடைந்தாலோ அல்லது தீவிரமடைந்தாலோ, உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

பருவகால காய்ச்சல் ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது, கைக்குட்டை கட்டாயம் கொடுத்து அனுப்ப வேண்டும். இருமும் போதும், தும்மும்போதும் கைக்குட்டையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்.

மேலும் பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், கழிவறைக்குச் சென்று வந்தபிறகும், விளையாடச் சென்று திரும்பி வரும்போது என நாள் ஒன்றுக்கு சுமார் 10 முறை கைகளை கழுவி சுத்தப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல. அனைத்து பொதுமக்களுக்கும் கை கழுவுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

கள நிலவரம் தொடர் கண்காணிப்பு மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தேவையான பொது சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Summary

ICMR has clarified that no new strain of H1N1 has been identified and there is no cause for panic.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.