காதல் திருமணம் காரணமா? 28 வயது இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!
28 வயதான இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது பற்றி...

தற்கொலை - பிரதிப் படம்
உத்தரப் பிரதேசத்தில் 28 வயதான இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், காதல் திருமணம் நடந்து சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு, 28 வயதான இளைஞர் ஒருவர், அவர் வசித்து வந்த வாடகை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக, காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) தெரிவித்தது.
தற்கொலை செய்து கொண்ட நபர், நவாடியா கிராமத்தைச் சேர்ந்தவரும், ஒரு தனியார் மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரிந்தவருமான ஃபைசான் என அடையாளம் காணப்பட்டார்.
இதுகுறித்து ஃபைசானின் மனைவி ஜாஸ்மின் கூறுகையில், “சனிக்கிழமை இரவு உணவு உண்ட பிறகு ஃபைசான் உறங்கச் சென்றார். இருவரும் ஒரே அறையில்தான் உறங்கினோம். ஞாயிற்றுக்கிழமை காலை நன் கண்விழித்தபோது, அவர் என்னுடைய துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.
ஃபைசானின் குடும்ப உறுப்பினர்கள் சிலர், எங்களுடைய திருமணத்தில் அதிருப்தி அடைந்து, எங்களுடனான உறவை முறித்துக் கொண்டனர். இதனால் சமீப காலமாக அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்தார்” என்று வாக்குமூலம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, ஃபைசானின் உறவினர்கள் சிலர், ”அவருடைய தலையில் ரத்தம் கசிந்தது. எனவே, இந்தத் தற்கொலையில் சந்தேகம் உள்ளது” என்று குற்றம் சாட்டினர்.
உடற்கூராய்வு அறிக்கை, ஃபைசானின் மனைவி மற்றும் உறவினர்களின் வாக்குமூலம் ஆகியவற்றை வைத்து அடுத்த கட்ட விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
Summary
A 28-year-old man committed suicide by hanging himself in Uttar Pradesh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






