தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

திரிபுரா: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1,305 பேர் மீட்பு

திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு திரிபுரா மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டிருப்பது பற்றி...

Tripura: 1,305 rescued from flood-hit areas

திரிபுரா

Published On :

மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு திரிபுரா மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் இருந்து 1,305 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

திரிபுராவில் சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, ஹவுரா மற்றும் கதாகால் நதிக்கரையில் அமைந்துள்ள பல தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. இதுவரை 413 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,305 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 17 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பல்டாகால், ஸ்ரீலங்காபஸ்தி, கதாகால் மற்றும் பம்புடியாவின் ஒரு பகுதி ஆகியவை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

முதல்வர் மாணிக் சாஹா, ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களைப் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தார். வெள்ளப் பிரச்னைக்கு அரசு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பார்முரா மலையில் பெய்த கனமழை காரணமாக மேற்கு திரிபுரா மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

திடீர் வெள்ளத்தைத் தடுக்க கரைகளும் கட்டப்பட்டுள்ளன.

ஆனால் இயற்கையின் சீற்றத்தை நம்மால் தடுக்க முடியவில்லை. தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

Summary

At least 1,305 people have been rescued from low-lying areas of West Tripura district that have been affected by a rain-triggered flash flood, an official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.