போராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!காஞ்சிபுரத்தில் இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்! ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்!ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசு

அஸ்ஸாம் வெள்ளப் பேரழிவு: பலி 105 ஆக உயர்வு!

அஸ்ஸாமை புரட்டிப்போட்டி வெள்ளம் பற்றி..

அஸ்ஸாம் வெள்ளம்

Published On :

அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பலியானோர் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

பேரிடர் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்,

அஸ்ஸாமில் இந்தாண்டு ஏற்பட்ட வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 64 ஆண்கள், 24 பெண்கள், 17 குழந்தைகள் என இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐந்து மாவட்டங்களில் சுமார் 32,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்திலேயே சிவசாகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 53 பேரும், சாரைடியோ மாவட்டத்தில் 22 பேரும், ஜோர்ஹட்டில் 9 பேரும், கோலாகாட்டில் 8 பேரும், கார்பி ஆங்லாங்கில் 4 பேரும், தேமாஜியில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளச் சூழல் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களைப் பாதித்துள்ளது. ஐந்து மாவட்டங்களில் சுமார் 32,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரிகள் தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் 25 மாவட்டங்கள் மற்றும் 2,734 கிராமங்களைச் சேர்ந்த 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களைத் தங்கவைக்க 37 நிவாரண மையங்களும் செயல்பட்டு வருகின்றன. மொத்தமாக 8,268.71 ஹெக்டேர் பயிர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் 42,105 விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கு வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டுள்ளது. மாநில நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தொடர்ந்து சூழலை மதிப்பிடுவதோடு, ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் நீர்மட்டத்தையும் கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.