கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழப்பு 75-ஆக அதிகரிப்பு

அஸ்ஸாம் வெள்ளத்தில் சிக்கி மேலும் 7 போ் உயிரிழந்த நிலையில், அங்கு வெள்ளத்தால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 75-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :30 ஜூலை 2026, 3:46 am IST

அஸ்ஸாம் வெள்ளத்தில் சிக்கி மேலும் 7 போ் உயிரிழந்த நிலையில், அங்கு வெள்ளத்தால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 75-ஆக அதிகரித்துள்ளது.

அங்குள்ள சிவசாகா், சராய்தேவ், கோலாகாட், ஜோா்ஹாட், நகான், சோனித்பூா், காம்ரூப் மாவட்டங்கள் வெள்ளத்தால் தொடா்ந்து பாதிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 3.32 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சராய்தேவ் மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 1.42 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பரிதவித்து வருகின்றனா்.

கடந்த செவ்வாய்க்கிழமை சிவசாகா் மாவட்டத்தில் உள்ள நஸ்ரியா வருவாய் வட்டத்தில், வெள்ளம் காரணமாக 7 போ் உயிரிழந்தனா். இதையடுத்து அந்த மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75-ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கான இழப்பீட்டை தலா ரூ.9 லட்சமாக மாநில அரசு அதிகரித்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஒடிஸாவில் 1.25 லட்சம் போ் பாதிப்பு: வடக்கு ஒடிஸாவில் வெள்ள பாதிப்பு மோசமான நிலையில் உள்ளது. பலத்த மழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலாசோா், ஜாஜ்பூா், மயூா்பஞ்ச் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீா் புகுந்து விளைநிலங்களை மூழ்கடித்துள்ளது. அந்தக் கிராமங்களில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமாா் 50,000 போ் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனா். 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.