மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெ. பி. நட்டா புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதுதொடர்பாக எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி,
ஆகஸ்ட் 13 அன்று மாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராபி உள்ளிட்ட உடல்நல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், ஜெ.பி. நட்டாவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி எனப்படும் இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நட்டாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. அவர் ஓரிரு நாள்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் எனத் தகவல் தெரிவித்துள்ளது.
நட்டாவின் உடல்நலம் விரைவில் குணமடையத் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
Union Health and Family Welfare Minister JP Nadda underwent angioplasty at the All India Institute of Medical Sciences (AIIMS), New Delhi, on Monday and is currently stable, the hospital said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை!

ராகுல் எதிர்க்கட்சித் தலைவரானது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டம்! ஜெ.பி. நட்டா காட்டம்!

மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!

பேச்சுவார்த்தைக்குத் தயார்! எங்கள் அலுவலகத்துக்கோ இல்லத்துக்கோ சிஜேபியினர் வரலாம்: ஜெ.பி. நட்டா
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!




