மதுரையில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார்!பி.டி. அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்து! மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார்!மதுரையில் முதல்வர் விஜய் சாலைவலம்!ஒரு ஓட்டில் தோல்வி: திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு நிராகரிப்பு ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி!செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

எதிர்க்கட்சிகள் பொய்களைப் பரப்பி நாட்டின் சூழலைக் குலைக்க முயற்சி! ஜெ.பி. நட்டா

வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய்களைப் பற்றி..

Nadda

ஜெ.பி. நட்டா - கோப்புப்படம்

Published On :

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் பொய்களைத் தேர்தல் ஆணையம் அம்பலப்படுத்திய பிறகும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நாட்டின் சூழலைக் குலைக்க முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா குற்றம் சாட்டினார்.

செய்தியாளர்களிடம் பேசிய நட்டா,

நாட்டின் வளர்ச்சியைக் கண்டு விரக்தியும் மனச்சோர்வும் அடைந்துள்ள எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி குழப்பத்தையும் அராஜகத்தையும் பரப்பப் புதிய வழிகளை வகுத்தது வருகின்றது.

சில நாள்களுக்கு முன்பு புனையப்பட்ட கதையை வைத்து நாடு முழுவதும் உருவாக்கப்பட்ட அமளியை நாம் அனைவரும் பார்த்தோம்.

தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் ஒவ்வொரு பொய்யையும் அம்பலப்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் மீண்டும் சூழலைக் கெடுக்க முயற்சிக்கின்றனர்.

நாட்டின் தன்னாட்சி மற்றும் அரசியலமைப்பு சார்ந்த நிறுவனங்களுக்குக் களங்கம் விளைவிப்பதும் அவற்றை வலுவிழக்கச் செய்வதுமே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோரின் ஒரே நோக்கமாக மாறியுள்ளது.

அவர்களுக்கு நாட்டின் பாதுகாப்பு, பொது நலன், நாட்டின் கௌரவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றில் எந்த அக்கறையும் இல்லை. அவர்களின் ஒரே நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான், அதுவும் பொதுச் சேவைக்காக அல்ல, மாறாக வாரிசு அரசியலை வளர்ப்பதற்கும் தனிப்பட்ட ஆதாயங்களை அடைவதற்குமே.

ஒரு பொய்யை நூறு முறை திரும்பத் திரும்பச் சொல்வது அதை உண்மையாக மாற்றிவிடாது.

எதிர்க்கட்சிகளின் இரட்டை வேடங்களையும் எதிர்மறை அரசியலையும் நாட்டு மக்கள் முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளனர்.

நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்க முற்படும் சக்திகளுக்கு மக்கள் கடந்த காலங்களில் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். எதிர்காலத்திலும் அவ்வாறே செய்வார்கள் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.