ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

ராகுல் எதிர்க்கட்சித் தலைவரானது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டம்! ஜெ.பி. நட்டா காட்டம்!

ராகுல் காந்தியின் செயலுக்கு ஜெ.பி. நட்டா கடும் விமர்சனம்...

JP Nadda

ராகுல் காந்தி, ஜெ.பி. நட்டா - X | ANI

Published On :

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியைப் பார்க்க நேர்ந்தது ஜனநாயகத்துக்கு துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா வெள்ளிக்கிழமை விமர்சித்துள்ளார்.

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து தில்லியில் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் பிரதமா் மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கம் இல்லாமலேயே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

இந்நிலையில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில், மத்திய அரசையும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கடுமையாக விமர்சித்து ராகுல் காந்தி பேசினார்.

அப்போது, “பிரதமா் மோடியின் மனதில் வெளிநாட்டுத் தலைவா்களை கட்டியணைப்பதுதான் வெளியுறவுக் கொள்கை என்ற கருத்தை யாரோ விதைத்துவிட்டனா்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டதற்கு பாஜக நிர்வாகிகள் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெ.பி. நட்டா தெரிவித்திருப்பதாவது:

“ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இப்படி இருப்பதைப் பார்க்க நேர்ந்தது, நாட்டின் ஜனநாயகத்திற்கு துரதிர்ஷ்டவசமானது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையிலும், ராகுல் காந்தியைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டியிருப்பது எத்தகைய துயரமான விஷயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Rahul becoming the Leader of the Opposition is a misfortune for democracy! J.P. Nadda lashes out!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.