நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பேரணியில் காவல் துறையின் தடியடியால் படுகாயமடைந்த இளைஞர்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா இன்று (ஜூலை 21) சந்தித்தா.
அவர்களின் உடல் நிலை குறித்து கேட்டறிந்த ஜெ.பி. நட்டா, மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.
நீட் முறைகேடுகளைக் கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் பதவி விலகக் கோரி தில்லி ஜந்தர் மந்தர் திடலில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று (ஜூலை 20) பேரணி சென்றனர்.
நாடாளுமன்ற சாலையில் நுழையும்போதே, காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். பெண்கள் உள்பட பலரின் மீதும் தடியடி நடத்தினர். இதில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், தொடர்ந்து இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே படுகாயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள தில்லி லேடி ஹர்திங்கா மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா இன்று நேரில் சென்று சிகிச்சைப் பெற்று வரும் இளைஞர்களிடம் நலம் விசாரித்தார்.
நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியின்போது, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர்கள் செளரவ் தாஸ், ஆஷுதோஷ் ரன்கா ஆகியோர் ஜெ.பி. நட்டாவை நேரில் சந்தித்து 3 கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும், சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக்கை விடுவிக்க வேண்டும், நீட்-இளநிலை தோ்வு வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்பதுடன் நீட் தோ்வு மன உளைச்சலால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அவர்களிடம் பேசிய ஜெ.பி. நட்டா, போராட்டத்தைக் கைவிட்டு, அமைதியான சூழல் திரும்ப அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கோரினார். மேலும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும் நட்டா குறிப்பிட்டிருந்தார்.
Summary
JP Nadda Meets Injured Protesters At Delhi Hospital After
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவிடம் 3 அம்ச கோரிக்கை மனு அளித்த சிஜேபி

உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு!

மாநிலங்களின் தேவைக்கேற்ப தொடர்ந்து உரங்கள் வழங்கப்படும்: மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா








