ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?மேற்குவங்கம்: மாநிலங்களவையின் 3 இடங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை! உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

மாநிலங்களின் தேவைக்கேற்ப தொடர்ந்து உரங்கள் வழங்கப்படும்: மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

மாநிலங்களின் தேவைக்கேற்ப தொடர்ந்து உரங்கள் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியிருப்பது தொடர்பாக...

News image

மத்திய ரசாயனம், உரங்கள் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா - டிஎன்எஸ்

Updated On :6 ஜூலை 2026, 1:23 pm IST

இந்தியாவுக்கான உரங்கள், உர மூலப்பொருட்களை ஏற்றி வந்த மொத்தம் 15 இந்திய சரக்குக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்துள்ளன எனவும் இந்தக் கப்பல்கள் வந்து சேர்வதன் மூலம், நாட்டின் உர இருப்பை கணிசமாக அதிகரிக்கும் என்றும் மாநிலங்களின் தேவைக்கேற்ப தொடர்ந்து உரங்கள் வழங்கப்படும் என மத்திய ரசாயனம், உரங்கள் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு 20 கப்பல்களில் உரம் மற்றும் அதுசாா்ந்த பொருள்களை ஏற்றிவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 15 கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்து விட்டன. அதில் 8 கப்பல்களில் மொத்தம் 3.32 லட்சம் டன் யூரியா உள்ளது. 4 கப்பல்களில் 2.57 லட்சம் டன் டிஏபி-யும், 3 கப்பல்களில் 1.11 லட்சம் டன் சல்பரும் உள்ளது. அவை அனைத்தும் ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்திய துறைமுகங்களை வந்தடையும்.

மேலும் 5 கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒரு கப்பலில் 0.25 லட்சம் டன் அமோனியா, 0.45 லட்சம் டன் யூரியா உள்ளது. இதுமட்டுமன்றி 2 யூரியா கப்பல்கள், ஒரு சல்பா் கப்பல் ஆகியவற்றில் சரக்குகளை ஏற்றும் பணி நடக்கிறது. அந்தக் கப்பல்களும் உரிய நேரத்தில் இந்தியாவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜே.பி. நட்டா கூறுகையில், இந்தியாவுக்கான உரங்கள், உர மூலப்பொருட்களை ஏற்றி வந்த மொத்தம் 15 இந்திய சரக்குக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்துள்ளன. இந்தக் கப்பல்கள் இந்தியா வந்து சேர்வதன் மூலம், நாட்டின் உர இருப்பை கணிசமாக அதிகரிக்கும் என்றும் மாநிலங்களின் தேவைக்கேற்ப தொடர்ந்து உரங்கள் வழங்கப்படும் என நட்டா கூறினார்.

மேற்கு ஆசியாவில் தொடங்கிய மோதல், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைக் கடுமையாகப் பாதித்தது. உரங்களின் விலை கடுமையாக உயர்ந்ததுடன், சரக்குகள் வந்து சேரும் நேரமும் கணிசமாக அதிகரித்தது. இந்த உலகளாவிய நெருக்கடியால் இந்தியாவும் பாதிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ், மத்திய அரசு ஆரம்பத்திலிருந்தே விழிப்புடனும் முழுமையாகத் தயாராகவும் இருந்தது என்று அமைச்சர் கூறினார். மாற்று வழிகள் மூலம் உரங்களை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டதன் விளைவாக, இன்று நமது உர இறக்குமதி, உள்நாட்டு உற்பத்தி ஆகிய இரண்டும் மிகவும் வலுவான நிலையில் உள்ளன என்று அவர் கூறினார்.

உரத் தயாரிப்பு ஆலைகளுக்கான இயற்கை எரிவாயு விநியோகம், தற்போது மீண்டும் 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து உரத் தயாரிப்பு ஆலைகளும் முழுத் திறனுடன் இயங்குகின்றன.

பிராந்திய அளவில் உரங்கள் கிடைப்பதையும், வெளிப்படையான விநியோகத்தையும் உறுதி செய்வதற்காக, உரத்துறை மாநில அரசுகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் நமது விவசாயிகளைப் பாதிக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்கிறது. நமது விவசாயிகளின் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை நமது அரசு உறுதி செய்துள்ளது.

உலகளாவிய உர விலைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு ஏற்பட்ட போதிலும், மத்திய அரசு விவசாயிகளின் நலனைத் தனது மிக உயர்ந்த முன்னுரிமையாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

Summary

India was also affected by this global crisis, resulting in challenges in ensuring uninterrupted supplies of fertilizer raw materials and finished fertilizers...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.