நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்பு

News image

கோதுமை (கோப்புப்படம்)

Updated On :4 ஜூன் 2026, 4:26 am IST

2026-27 ராபி சந்தைப் பருவத்தில் மத்திய அரசின் கோதுமை கொள்முதல் 17 சதவீதம் அதிகரித்து 3.5 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய உணவுத் துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நடப்பு பருவத்தில் இதுவரை 3.5 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது நிா்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிகம். கோதுமை விளையும் முக்கிய மாநிலங்கள் அனைத்திலும் கொள்முதல் நடவடிக்கை நிறைவு பெற்றுவிட்டது.

இந்திய உணவுக் கழகம் மற்றும் அரசு அமைப்புகள் சாா்பில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. இதன்மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அனைவருக்கும் உணவு கிடைப்பதும், பிற சமூக நலத் திட்டங்களில் உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யவும் முடியும்.

பஞ்சாப் மாநிலத்தில் அதிகபட்சமாக 1.21கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. இதற்கு அடுத்து மத்திய பிரதேசத்தில் 1.04 கோடி டன், ஹரியாணாவில் 80.1 லட்சம் டன், ராஜஸ்தானில் 24 லட்சம் டன், உத்தர பிரதேசத்தில் 17 லட்சம் டன் கோதுமை கொள்முதல் நடைபெற்றுள்ளது. அனைத்து மாநிலங்களிலுமே குறிப்பிடத்தக்க அளவுக்கு கொள்முதல் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.