நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!

நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும் என ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா சவால் விடுத்துள்ளது பற்றி...

News image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா - கோப்புப் படம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 9:42 pm IST

நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா சவால் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் தொடர்ந்து நான்காவது வாரமாக இரு அவைகளும் முடங்கியுள்ளன.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்தும் ஜார்க்கண்ட்டில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்தும் ஜெ.பி. நட்டா பேசியதாவது:

ஜார்க்கண்டில் உள்ள மாணவர்களின் குரல்களை அரசு கேட்கவில்லையா? எனக்குக் கிடைத்தத் தகவலின்படி, அங்கு முள்வேலிகள் மாணவர்களின் வேண்டுகோளின் பேரிலேயே அமைக்கப்பட்டன.

ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் கடைப்பிடிக்கும் இந்த இரட்டை நிலைப்பாடு, நாட்டின் எதிர்காலத்தின் மீதோ அல்லது அதன் முன்னேற்றத்தின் மீதோ அவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பதைக் காட்டுகிறது.

அவர்களின் நடவடிக்கைகள், தொடர்ந்து குழப்பத்தை உண்டாக்குவது, எதிர்மறை அரசியலில் ஈடுபடுவது மற்றும் பொறுப்பற்ற எதிர்க்கட்சியாகச் செயல்படுவது ஆகியவற்றுடன் மட்டுமே நின்றுவிடுகின்றன. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும், ராகுல் காந்தியை நாடாளுமன்ற அவைக்கு வருமாறு மீண்டும் சவால் விடுகிறேன். நாங்கள் விவாதத்திற்குத் தயாராக இருக்கிறோம். உங்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும். தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்பதையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.

Summary

Union Minister J.P. Nadda has challenged Leader of the Opposition in the Lok Sabha Rahul Gandhi, stating that a fitting reply will be given if the matter comes up for debate in Parliament.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.