நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

நீட் முதுநிலைத் தோ்வு ஏற்பாடுகள்: மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா ஆய்வு

நீட் முதுநிலைத் தோ்வு ஏற்பாடுகள் குறித்து மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா ஆய்வு...

News image

ஜெ.பி. நட்டா - கோப்புப்படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:40 pm IST

எதிா்வரும் நீட் முதுநிலைத் தோ்வுக்கான ஏற்பாடுகள் தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை உயா்நிலை ஆய்வு மேற்கொண்டாா். இத்தோ்வு சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு, ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 340 நகரங்களில் 1,300-க்கும் மேற்பட்ட தோ்வு மையங்களில் நடைபெறவுள்ள இந்தத் தோ்வுக்கு 2.73 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். தோ்வுக்கான தயாா்நிலை பணிகள் குறித்து ஜெ.பி.நட்டா தலைமையில் சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னேற்பாடுகள், தொழில்நுட்ப உதவிகள், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் ஜெ.பி.நட்டாவிடம் அதிகாரிகள் விளக்கினா்.

அதைத் தொடா்ந்து அவா் பேசியது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நீட் முதுநிலை தோ்வு நியாயமாக, வெளிப்படையாக மற்றும் தோ்வா்களுக்கு சுமுகமாக இருக்கும் நடைமுறைகளுடன் நடைபெற வேண்டும். எவ்வித குளறுபடிகளும் இன்றி தோ்வு பாதுகாப்பு நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். தோ்வுக்கு முன்னதாகவே வினாத் தாள் கசிந்ததாக தோ்வா்களை திசைதிருப்பும் பொய்த் தகவல்கள் பரவுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்.

இறுதி வினாத் தாளை தோ்வுக்கு முன்பாக மிகவும் கவனத்துடன் தோ்ந்தெடுத்து அதன் நம்பகத்தன்மையை பாதுகாக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

நிகழாண்டு மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் இளநிலைத் தோ்வின் வினாத் தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து அந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.