முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

அஸ்ஸாம் வெள்ளம்: தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமருக்கு அகில் கோகோய் வலியுறுத்தல்!

அஸ்ஸாம் வெள்ளம் பற்றி அகில் கோகோய் பிரதமருக்கு வலியுறுத்துவது...

News image

அஸ்ஸாம் வெள்ளம் சூழ்ந்த பகுதி - file photo

Updated On :36 வினாடிகள் முன்பு

அஸ்ஸாமில் பாதிக்கப்பட்ட கடுமையான வெள்ளத்தைத் தேசிய பேரிடர் என அறிவிக்குமாறும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி வழங்குமாறும் பிரதமர் நரேந்திர மோடியை அஸ்ஸாம் எம்எல்ஏ அகில் கோகோய் வலியுறுத்தினார்.

சிவசாகர் சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த ரைஜோர் தள கட்சி எம்எல்ஏவான அகில் கோகோய் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,

அஸ்ஸாமில் ஏற்பட்ட அழிவுகரமான வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கும், மறுவாழ்வு மற்றும் நீண்டகால சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் தேவையான 22 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

ஜூலை 19 அன்று ஏற்பட்ட வெள்ளத்திற்கான காரணங்கள் குறித்தும், குறிப்பாக அரசியல் ஆதரவாளர்களின் துணையுடன் அஸ்ஸாம் - நாகாலாந்து எல்லைப் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் மற்றும் திகோவ் ஆற்றின் படுகையில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளை ஆகியவை குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பேரிட்ரானது மனித உயிர்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் மட்டுமல்லாமல், அஸ்ஸாமின் கலாசார பாரம்பரியத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனவே இந்த மூன்று மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.

மிகவும் பாதிக்கப்பட்ட சிவசாகர், நசிரா ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டமைக்க ரூ. 1,000 கோடி மதிப்பிலான சிறப்பு 'மறுசீரமைப்புத் தொகுப்பு' திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

பிழைகள் அல்லது விடுபடல்கள் காரணமாக இதுவரை நிதியுதவி பெறாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும், அஸ்ஸாம் அரசு அறிவித்த ரூ. 15,000 மதிப்பிலான ஒருமுறை நிதியுதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி செய்யவும், மூன்று மாவட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் உயர்தர விதைகளை வழங்கவும் வேளாண்மைத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நசிரா மாவட்டத்தின் நேபாளிகுட்டி கிராமத்தில் வீடுகளை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாற்று நிலம், உறுதியான வீடு வழங்குவதையும், பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களிலும் மத்திய மற்றும் மாநிலத் திட்டங்களின் கீழ் வீடுகள் ஒதுக்கப்படுவதையும் பிரதமர் உறுதி செய்ய வேண்டும்.

நீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களிலும் மூன்று நாள்களுக்கு ஒருமுறை நடமாடும் மருத்துவக் குழுக்களை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தக் கடுமையான வெள்ளம் தனிநபர்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதோடு, பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சமூக-பொருளாதாரக் கட்டமைப்பையும் சீர்குலைத்துள்ளதாகவும், இதற்கு மத்திய அரசின் உடனடி கவனமும் நிதியுதவியும் தேவை.

மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் இதுவரை 104 பேர் உயிரிழந்துள்ளனர். சேதமடைந்த கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள். பொது உள்கட்டமைப்புகளைச் சீரமைக்கவும், புதுப்பிக்கவும் மற்றும் மறுகட்டமைப்பு செய்யவும் போதுமான நிதியை ஒதுக்குமாறு கோகோய் பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.

Assam MLA Akhil Gogoi has urged Prime Minister Narendra Modi to declare the recent severe floods in the three districts of Sivasagar, Charaideo and Jorhat as a 'national disaster' and provide Rs 10 lakh to each affected family and business enterprise.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.