முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

சிஜேபி ஆய்வு எதிரொலி: ராஜஸ்தான் அரசுப் பள்ளிகளில் வெளியாட்களுக்குத் தடை!

முன் அனுமதியின்றி வெளியாட்கள் பள்ளிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றி..

News image

சிஜேபி - X

Updated On :17 ஆகஸ்ட் 2026, 12:27 pm IST

ராஜஸ்தான் அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்யப்போவதாக சிஜேபி அறிவித்ததைத் தொடர்ந்து, பள்ளி முதல்வரின் முன் அனுமதியின்றி வெளியாட்கள் பள்ளிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் தேசிய அளவிலான பிரசாரத்தைக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே ஆக. 11 முதல் தொடங்கியுள்ளார்.

அதன்படி, அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை போன்ற புகார்கள் தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சிஜேபி ஆய்வு மேற்கொண்டுவரும் சூழலில், முதல்வரின் அனுமதியின்றி வெளியாட்கள் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று மாலை அரசு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற போராட்டங்கள் குறித்த காணொலிகள், செய்திகள் சமீபத்திய வாரங்களில் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை சமூக வலைத்தள பதிவு ஒன்றில், சிஜேபியின் இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா, ராஜஸ்தானில் மோசமான நிலையில் உள்ள பள்ளிகளைத் தங்கள் கட்சி ஆய்வு செய்யவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

மோசமான நிலையில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்யுமாறு ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், அஜ்மீர், ஜோத்பூர், உதய்பூர், தோல்பூர், பரத்பூர், கோட்டா, பார்மர் மற்றும் ஹனுமன்கர் ஆகிய இடங்களிலிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன.

இப்பகுதிகளில், பள்ளிகளைச் சீரமைக்கக் கோரும் மக்களின் கோரிக்கைகளை நிர்வாகம் கண்டுகொள்ள மறுத்து வருகிறது. அடுத்த சில நாள்களில் இந்த இடங்கள் அனைத்திற்கும் நேரில் சென்று பார்வையிடுவேன் என்று அவர் கூறியிருந்தார்.

பள்ளிகளில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்வதற்குப் பதிலாக, அவற்றை உலகின் கண்களிலிருந்து மறைப்பதற்கான உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளதாக ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் டிகாராம் ஜூலி சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.

Following the CJP's announcement that it would conduct inspections of government schools in Rajasthan, a ban has been imposed on outsiders entering the school premises without the prior permission of the school principal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.