கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸின் வீட்டிற்குள் ஏராளமான ஊடகத்தினர் அத்துமீறி நுழைந்ததற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக, தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நடத்திய போராட்டம் நாடு தழுவிய மாணவர் போராட்டமாக உருவெடுத்தது. இதையடுத்து, மத்திய கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, சிஜேபியின் நிர்வாகிகள் மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் சிலர் இணையத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், தில்லியிலுள்ள சிஜேபி தலைமைச் செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸின் வீட்டிற்குள் இன்று (ஆக. 5) காலை பல்வேறு யூடியூப் மற்றும் செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அத்துமீறி நுழைந்து அவரது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இதுபற்றி, இன்று சௌரவ் தாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“சில யூடியூபர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து உள்ளே இருக்கும் காட்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். இது எனது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது மட்டுமின்றி எனக்கும் என் குடும்பத்துக்கும் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவாகச் சமூக விரோதிகள் எனது இல்லத்தில் என்னைத் தாக்கினால் அதற்கு அந்த யூடியூபர்களும் அவர்களை ஒருங்கிணைக்கும் ட்ரோல் கும்பலை இயக்குவர்களுமே பொறுப்பு” எனக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சௌரவ் தாஸ் மகாராஷ்டிரத்தில் இருக்கும் நிலையில், அவரது வீட்டிற்குள் ஊடகங்கள் அத்துமீறி நுழைந்ததற்கு, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெரக் ஓ பிரைன், மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சௌரவ் தாஸின் வீட்டிற்குள் தில்லி காவல் துறையினர் சோதனை நடத்தியது குறித்து மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் குமார் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Leaders from various political parties are condemning the trespassing by numerous journalists into the home of Sourav Das, cjp spokesperson
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போராட்டத்தின் முதல் நாளிலிருந்தே மாணவர்களுகாக துணைநிற்கும் சிஜேபி: சௌரவ் தாஸ்

தமிழில் வாழ்த்து தெரிவித்த CJP-ன் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ்! | Delhi

ஜூலை 20 போராட்டம் டிரைலர்தான்; எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால்...! சிஜேபி எச்சரிக்கை

தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK




