மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கோதாவரியில் குதித்து குடும்பமே தற்கொலை: துப்பாக்கிச் சுடும் பயிற்சியாளர் கைது

கோதாவரியில் குதித்து பொறியாளர், மனைவி, மகள் தற்கொலை செய்த சம்பவத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.

Published On :

ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில், பொறியாளர், அவரது மனைவி மற்றும் மகள் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியாளர் கைது செய்யப்படுள்ளார்.

பஞ்சாயத் ராஜ் துறையின் உதவி பொறியாளராக இருக்கும் தில்லபுடி நூகராஜூ, அவரது மனைவி மீனா, மகள் சௌஜன்யா ஆகியோர், சாலை மற்றும் ரயில் பாலத்திலிருந்து ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவு கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்களுடன் 10 வயது பேரனும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீனவர்களால் காப்பாற்றப்பட்டார்.

நூகராஜூ எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதத்தில், ஷேக் சாதிக் கான் என்ற துப்பாக்கிச் சுடும் பயிற்சியாளர்தான் இவர்களது தற்கொலைக்குக் காரணம் என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்தவர் பல மாநிலங்களில் தேடுதல் பணி நடைபெற்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நூகராஜூவின் பேரன் படித்த பள்ளியில்தான், இவரும் பயிற்சியாளராக உள்ளார், இவர்களது குடும்பத்துடன் கான் இரண்டு ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். ஆனால், எந்தவிதமான பிரச்னை காரணமாக இந்த தற்கொலை நடந்திருக்கிறது என்பது குறித்து விசாரணைக்குப் பிறகே தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

கைதான கான் மீது, மதமாற்ற நடவடிக்கைகள், ஆயுதங்கள் கடத்தல் உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளும் எழுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.