திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்! தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

பிகாரில் அரசுத் தேர்வு வினாத்தாள் கசிவு: பேரணி சென்ற மாணவர்கள் - காவல்துறை மோதல்!

வினாத்தாள் கசிவு தொடர்பாக பிகார் முதல்வரின் இல்லத்தை நோக்கி பேரணி சென்ற மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்..

பேரணி சென்ற மாணவர்கள் - காவல்துறை மோதல். - படம்: பிடிஐ

Published On :25 ஆகஸ்ட் 2026, 3:44 pm IST

பிகாரில் அரசுத் தேர்வில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவு தொடர்பாக முதல்வரின் இல்லத்தை நோக்கி பேரணி சென்ற மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரில் பிகார் பணியாளர் தேர்வாணையம் நடத்திய பொதுத் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள மாணவர்கள் பிகார் முதல்வர் இல்லமான ராஜ்பவனை நோக்கி பேரணியில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

நேற்று மாலை மாணவர் சங்கத்தினரிடம் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில் அவர்கள் பேரணியைத் தொடர்ந்தனர்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள், தங்கள் கைகளில் மூவர்ணக் கொடிகளுடன் தலைநகர் பாட்னாவின் காந்தி திடலிலிருந்து முதல்வர் இல்லத்தை நோக்கிப் பேரணியாக சென்றனர்.

காவல்துறையினர் பலமுறை தடுத்தும், போராட்டக்காரர்கள் அத்துமீறி முதல்வரின் இல்லத்தை நோக்கி முன்னேறியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேரணியின் கட்டுப்பாட்டை இழந்ததால் காவல்துறையினர் அவர்களைக் கட்டுப்படுத்தினர்.

இருப்பினும் அவர்கள் தொடர்ந்து முன்னேறியதால் அவர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். இதனால், காவல்துறையினர் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, நீட் தேர்வில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்டோர் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது போலவே பிகாரிலும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.

Summary

Students protesting against the 70th Bihar Public Service Commission (BPSC) examination on Tuesday broke through police barricades as they marched from Gandhi Maidan towards Raj Bhavan in Patna, demanding that the exam be cancelled.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.