பிகாரில் சட்ட - ஒழுங்கு மோசமடைந்து வருவதாகவும், மொத்த மாநிலமே வினாத்தாள் கசிவுகளின் தலைநகராக மாறி வருவதாக ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ், 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் உள்பட போட்டித் தேர்வுகள் போன்றவற்றில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் வினாத்தாள் கசிவுகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், “பிகார் மாநிலம் வினாத்தாள் கசிவுகளின் தலைநகராக மாறி வருகிறது. இங்கு சட்ட - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது.
வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக மாணவர்கள் போராடுகையில், அவர்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு எதிராக ஏகே-47 ரக துப்பாக்கிகள் கூட பயன்படுத்தப்படுகின்றன” என்றார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் போராட்டக்காரர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை ஆகியவற்றைக் கண்டித்து நடத்தப்பட்ட 'பிகார் பந்த்' போராட்டத்திற்கு ஆதரவாக, ஜூலை 25 அன்று இடதுசாரி மாணவர் அமைப்பினர் பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
இதில், ஏகே-47 துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சம்பந்தப்பட்ட காவலர் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
மாணவர்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக பிகாரின் 'மகாகத்பந்தன்' கூட்டணி கட்சிகள் ஆகஸ்ட் 19 அன்று பாட்னாவில் உள்ள லோக் பவனுக்குப் பேரணி நடத்தி ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் ஒரு காவலரை மட்டும் இடைநீக்கம் செய்வது போதாது என்று கூறிய தேஜஸ்வி யாதவ், அதற்கு காரணமான உயர் அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Summary
Bihar is the capital of question paper leaks: Tejashwi Yadav alleges!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கோட்டையிலிருந்து பொய் பேசக் கூடாது: அகிலேஷ் யாதவ்

பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!

பிகார்: மெமு ரயிலின் 2 பெட்டிகளில் தீ விபத்து

மாணவர்களின் போராட்டம் மத்திய அரசைப் பணிய வைத்தது! அகிலேஷ் யாதவ்
விடியோக்கள்

அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே ஸ்பெஷல் லுக் விடியோ!



