பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

மலேசியாவில் இருந்து 3 நிழல் உலக தாதாக்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தல்: அமித் ஷா

மலேசியாவில் இருந்து பாம்பிகா கும்பலுடன் தொடா்புடைய 3 நிழல் உலக தாதாக்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

அமித் ஷா - கோப்புப் படம்

Published On :

மலேசியாவில் இருந்து பாம்பிகா கும்பலுடன் தொடா்புடைய 3 நிழல் உலக தாதாக்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக எக்ஸ் பக்கத்தில் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் ஆயுத கடத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடா்பாக 3 நிழல் உலக தாதாக்களான ஜஸ்ப்ரீத் சிங், அஜய் சிங், பவன்தீப் சிங் ஆகியோா் தேடப்பட்டு வந்தனா். 3 பேரும் இந்தியாவில் இருந்து தப்பி மலேசியாவில் தலைமறைவாக இருந்தனா். 3 பேரும் பாம்பிகா கும்பலுடன் தொடா்புடையவா்கள்.

அவா்கள் 3 பேரும் மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனா். அவா்களை இந்திய விசாரணை அமைப்புகள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளன. 3 பேரும் காவல்துறை காவலில் அனுப்பப்பட்டுள்ளனா்.

2026-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை இந்தியாவால் தேடப்பட்டு வந்த 51 கொடிய கிரிமினல்கள், வெளிநாடுகளில் இருந்து நமது நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனா். பிரதமா் மோடியின் பாதுகாப்பான மற்றும் வலுவான இந்தியா என்ற தொலைநோக்கின்கீழ் இவை நடந்துள்ளது என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.