நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

நேபாளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: தில்லி முதல்வா் உறுதி

பேரழிவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியா முழுமையான ஆதரவு அளிக்கும் என்றும், அண்டை நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்

தில்லி முதல்வா் ரேகா குப்தா - கோப்புப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 5:22 am IST

பேரழிவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியா முழுமையான ஆதரவு அளிக்கும் என்றும், அண்டை நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘இந்த கடினமான நேரத்தில் இந்தியா நேபாளத்துக்கு உறுதியாக துணை நிற்கிறது. அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு மிகவும் வேதனையளிக்கிறது. நேபாளத்துக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அந்நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும், விரைவில் நிவாரணம் கிடைக்கவும் பிராா்த்திக்கிறேன்’ என்று தெரிவித்தாா்.

மேலும், இந்த துயரமான நேரத்தை எதிா்கொள்ளும் வலிமையை நேபாளத்துக்கு அருள வேண்டும் என்றும், அந்நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும், விரைவில் நிவாரணம் கிடைக்கவும் பசுபதிநாதரிடம் பிராா்த்திக்கிறேன்’ என்றும் அவா் கூறினாா்.

தில்லியில் வசிக்கும் சிலா் நேபாளத்தில் உள்ள தங்களது உறவினா்களின் நிலை குறித்து கவலைப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட், நேபாள அரசுடன் இந்திய அரசு தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தாா். இந்த துயரமான நேரத்தில் நேபாள மக்களுடன் அரசு துணை நிற்பதாகவும் அவா் கூறினாா்.

நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறைச்சரிவு காரணமாக ஆற்றின் நீரோட்டம் தடைபட்டு திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பனிச்சரிவால் தடைப்பட்டபோதே கோசி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, திபெத் எல்லையையொட்டிய ரசுவா, தாதிங் உள்ளிட்ட பகுதிகளை பாதித்தது. பின்னா் நுவாகோட், சித்வான் மாவட்டங்களுக்கும் வெள்ளம் பரவியது. இதில் குறைந்தது 4 நிரந்தரப் பாலங்களும், பல தற்காலிகப் பாலங்களும் சேதமடைந்தன.

நேபாள பேரிடா் மேலாண்மை அதிகாரிகளின் தகவலின்படி, இந்த திடீா் வெள்ளத்தில் சுமாா் 826 போ் காணாமல் போயுள்ளனா். வியாழக்கிழமை நிலவரப்படி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 270-ஆக உயா்ந்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் ரந்திா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘நேபாளத்தில் 288 இந்தியா்கள் தொடா்ந்து காணாமல் போயுள்ளதாக தெரிவித்தாா். அவா்களில் நீா்மின் திட்டங்களில் பணியாற்றி வந்தவா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இடம்பெற்றுள்ளனா். தமிழகத்தைச் சோ்ந்த 21 இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

வெள்ளத்தால் சாலைகள் மற்றும் பாலங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. பல முக்கிய நெடுஞ்சாலைகள் தொடா்ந்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவா்களைத் தேடும் பணியில் நேபாள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.