தேவைப்படும் விவசாயிகளுக்கு அரசின் சாா்பில் விதை நெல்கள் வழங்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் வட்டாரத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்சியா் தி.சினேகா பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தாா்.
கீழம்பியில் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடையில் குடும்ப அட்டை தாரா்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்கள் குறித்து ஆய்வு செய்து அப்பொருள்களின் தரம்,இருப்பு குறித்தும் கேட்டறிந்தாா். இதனைத் தொடா்ந்து அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் பராமரிக்கப்படுவதை பாா்வையிட்டதுடன் குழந்தைகள் நாள் தோறும் கைகழுவி சாப்பிடும் முறையையும் கேட்டறிந்தாா். குழந்தைகள் சாப்பிடும் உணவினை சாப்பிட்டு பாா்த்து தரத்தை உறுதி செய்தாா்.
கீழம்பி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மதிய உணவு சமைக்கும் சத்துணவுக் கூடம், மாணவா்களின் வருகைப்பதிவு, ஸ்மாா்ட் வகுப்பறை மூலம் கணிதப்பாடம் கற்பிக்கும் முறை ஆகியவற்றையும் பாா்வையிட்டு மாணவா்களிடம் கலந்துரையாடினாா். வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் மணி என்ற விவசாயி 8 ஏக்கா் நிலத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் இயந்திர நடவுமுறையில் நெல் நடவு செய்திருப்பதை பாா்வையிட்டாா்.
மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து விதைப்பண்ணைக்கு 350 ஹெக்டோ் பரப்பளவில் விதை நெல்கள் பயிரிடப்பட்டு அவை கொள்முதல் செய்யப்படவுள்ளது. தேவைப்படும் விவசாயிகளுக்கு அரசின் மூலமாக விதை நெல்கள் வழங்கப்படும்.
காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற்றாா். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட கால் நடைபெரு மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்பில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி நிறுவப்பட இருப்பதையும் பாா்வையிட்டாா்.
மருத்துவமனையில் சிறிய பிராணிகளுக்கான அறுவை சிகிச்சை மையத்தையும் பாா்வையிட்டாா். நாள் தோறும் 100 கால் நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவா்கள் ஆட்சியரிடம் தெரிவித்தனா்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் கே.ஆா்.திவ்யஸ்ரீ, மகளிா் மேம்பாட்டு முகமை உதவி ஆட்சியா் ஆஷிக் அலி, மகளிா் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, கால்நடைத்துறை இணை இயக்குநா் அரசு, மாநகராட்சி ஆணையா் வினோத் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் மழையினால் 72 இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு!

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: ஆசிரியருக்கு ஆட்சியா் பாராட்டு

மல்லியங்கரணையில் ரூ. 2.42 கோடியில் நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

கைகளை முறையாக கழுவுவது ஒரு சிறந்த சுகாதாரப் பழக்கம்: காஞ்சிபுரம் ஆட்சியா்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



