வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

வினாத்தாள் கசிவு... காதலியைப் பழிவாங்க போலீஸில் போட்டுக் கொடுத்த முன்னாள் காதலன்!!

மகாராஷ்டிரத்தில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் காதலியைப் பழிவாங்க போலீஸில் போட்டுக் கொடுத்த முன்னாள் காதலனைப் பற்றி...

Published On :

மகாராஷ்டிரத்தில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் காதலியைப் பழிவாங்க முன்னாள் காதலன் போலீஸில் போட்டுக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி, 'குரூப்-பி' நிலையிலான மருந்து ஆய்வாளர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வை மகாராஷ்டிர அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்வின் வினாத்தாள் தேர்வு நாளுக்கு 2 நாள்கள் முன்னதாக சமூக ஊடகங்களில் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் கடந்த ஜூலை 27 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, மும்பை குற்றப்பிரிவின் துணை ஆணையர் நடத்திய விசாரணையின் முதல்கட்ட அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பித்த நிலையில், ரகசியம், நம்பகத் தன்மை, வெளிப்படைத்தன்மை, நடுநிலையைப் பாதுகாக்கவும், தேர்வு நடைமுறை மீதான நம்பிக்கையைத் தக்கவைக்கவும் தேர்வை ரத்து செய்வதாக ஆணையம் நேற்று அறிவித்தது.

இந்தியா முழுவதும் மாநில தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகள், தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் உள்ளிட்ட தேர்வுகளில் தொடரும் முறைகேடுகள் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வரும் சூழலில் மருந்து ஆய்வாளர் தேர்வில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவை பயன்படுத்தி, தன்னுடைய முன்னாள் காதலியைப் பழிவாங்க வேண்டும் என்று ஒரு இளைஞர் இதைச் செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மகாராஷ்டிர பணியாளர் தேர்வாணைய துணைச் செயலர் அபிஜித் லெண்டவே, உதவி பிரிவு அலுவலர்கள் கோபால் மராத்தே, விஸ்வேஷ்வர் நாகேட், கௌடல்யா, பயிற்சி நிறுவன இயக்குனர் பிரவின் பாட்டீல், ஆசிரியர் அம்ருத் நம்தியோ பாட்டீல், கௌரவ் பாட்டீல், மாலேகானை சேர்ந்த மருந்து நிறுவன ஊழியர் என மொத்தமாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மார்ச் 22 ஆம் தேதிக்கான வினாத்தாள் கசிந்துவிட்டதாக ஜூலை 22 ஆம் தேதி மகாராஷ்டிர பணியாளர் தேர்வாணையத்துக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலை கௌரவ் என்பவர் அனுப்பியதாகக் கூறப்படும் நிலையில், அவர் தன்னுடைய முன்னாள் காதலியான ருதுஜா என்பவர் முறைகேடு மூலமாக தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாகவும் கௌரவ் மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்.

ருதுஜாவின் தந்தை அம்ருத், பயிற்சி வகுப்பு இயக்குநர் பிரவீன் பாட்டிலிடன் ரூ. 5 லட்சம் கொடுத்து வினாத்தாளைப் பெற்றிருக்கிறார். வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அலுவலகத்திலிருந்து இரண்டு மூன்று பேரிடம் கை மாறிய வினாத்தாள் பயிற்சிக்கூடம் நடத்திபவர் மூலமாக தேர்வுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக, மார்ச் 20 ஆம் தேதி அம்ரூத்திடம் கிடைத்திருக்கிறது.

ஜூலை 22 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ருதுஜாவுடன் சேர்த்து மொத்தமாக 488 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வினாத்தாளைப் பெற்ற பிறகு, ருதுஜா சில கேள்விகளை மட்டும் கௌரவுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ருதுஜா தேர்ச்சியடைந்த நிலையில், கௌரவ் தோல்வியடைந்துள்ளார்.

ருதுஜா தேர்வில் தேர்ச்சி பெற்றதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் சண்டையிட்டுப் பிரிந்த நிலையில், எங்கே தேர்வில் தேர்ச்சிபெற்று அரசு வேலை கிடைத்துவிட்டால் தன்னுடைய காதலி தன்னைவிட்டுச் சென்றுவிடுவாளோ என்று அஞ்சி விரக்தியிலிருந்த கௌரவ், வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்த மின்னஞ்சலை தேர்வாணையத்திற்கு அனுப்பி அவரது காதலியைப் பழிவாங்கியிருக்கிறார்.

தேர்வுக்கான வினாத்தாளில் இருந்த கேள்விகளில் 77 கேள்விகள் சட்டவிரோதமாகக் கசிந்து வெளியான வினாத்தாளில் இருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தேர்வில் தேர்ச்சி பெற்றதற்காக முன்னாள் காதலியை காதலன் பழிவாங்கிய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Summary

A failed love story exposed the Maharashtra Public Service Commission (MPSC) Drug Inspector paper leak scam, with one of the accused alerting the police before being arrested.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.