
மோகன் பாகவத் நியூயார்க் நிகழ்ச்சி! ஒருங்கிணைப்பாளரின் எக்ஸ் கணக்கு முடக்கம்!
நியூயார்க்கில் மோகன் பாகவத் பங்கேற்கும் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் அமைப்பின் எக்ஸ் கணக்கு முடக்கம்...

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்... - கோப்புப் படம் |பிடிஐ
நியூயார்க்கில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பங்கேற்கும் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் அமைப்பின் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு கடந்த ஆக.25 ஆம் தேதி முதல் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், வரும் ஆக. 29 ஆம் தேதி நியூயார்க்கின் மேடிசன் சதுக்கத்தில் நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் மோகன் பாகவத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியை, அமெரிக்கன் ஹிந்தூஸ் ஃபார் எங்கேஜ்மெண்ட் அண்ட் டையலாக் (அஹெட்) எனும் அமைப்பு ஒருங்கிணைத்து நடத்துகின்றது. இந்த நிகழ்ச்சி குறித்து, அந்த அமைப்பு அவர்களின் எக்ஸ் தளப் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்ததது.
இந்த நிலையில், அஹெட் அமைப்பின் எக்ஸ் கணக்கு இன்று (ஆக. 27) முடக்கப்பட்டதாகவும்; பின்னர், பல மணிநேரம் கழித்து மீட்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தின் அல்காரிதத்தை தவறாகப் பயன்படுத்தி சிலர் தங்களின் கணக்கை முடக்க முயன்றதாக, அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
முன்னதாக, மோகன் பாகவத் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு நியூயார்க் நகர மேயரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஸோரான் மம்தானி மற்றும் ஹிந்தூஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
X account of the organization coordinating the event in New York, in which RSS chief Mohan Bhagwat is participating, has been suspended.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






