
குவைத் உடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்! வளைகுடா நாடுகளுடன் அணிசேரும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் மற்றும் குவைத் இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறித்து...
பாகிஸ்தான் மற்றும் குவைத் இடையே கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து... - எக்ஸ்/குவைத் ராணுவம்
பாகிஸ்தான் மற்றும் குவைத் இடையே கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
குவைத் பாதுகாப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா அலி அல்-சலீம் அல்-சபா அரசு முறைப் பயணமாக பாகிஸ்தான் நாட்டுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில், அவர் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃபை இன்று (ஆக. 27) நேரில் சந்தித்து உரையாடினார்.
இந்தச் சந்திப்பில், பாகிஸ்தான் மற்றும் குவைத் இடையே புதிய கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம், இருதரப்பும் ராணுவ பயிற்சிகளில் ஈடுபடுவதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த இணைந்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கெனவே, துருக்கி மற்றும் சௌதி அரேபியா உடன் இணைந்து முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது.
நேட்டோ அமைப்பில் இடம்பெற்றுள்ள துருக்கியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
A joint defense cooperation agreement has been signed between Pakistan and Kuwait.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







