குவைத் மீதான ஈரானின் தாக்குதல்களில் அந்நாட்டின் முக்கிய அரசுக் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க படைகளின் தாக்குதல் மீண்டும் தொடர்ந்துள்ளதால், குவைத் உள்ளிட்ட அமெரிக்காவின் ஆதரவுபெற்ற வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், குவைத் எல்லையினுள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற ஈரானிய ட்ரோன்களை இடைமறித்து சுட்டுவீழ்த்தியதாகவும், வான் பாதுகாப்பு அமைப்பு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் குவைத் ராணுவம் அறிவித்துள்ளது.
இருப்பினும், குவைத்தின் வடக்கு மாகாணங்களில் ஈரானிய படைகள் நடத்திய தாக்குதலில், அரசுக் கட்டமைப்புகள் மற்றும் புபியான் தீவின் மீதான தாக்குதலில் அங்குள்ள குடியிருப்புக் கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில், நல்வாய்ப்பாக எந்தவொரு உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், தாக்குதலில் சேதமடைந்த கட்டமைப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, அமெரிக்காவுக்கு உளவுத் தகவல்களை அளிப்பதாகக் குற்றஞ்சாட்டி பஹ்ரைன் நாட்டிலுள்ள அமேசான் நிறுவனத்தின் தரவு மையங்களின் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Summary
key government infrastructure in Kuwait has been damaged in attacks by Iran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமேசானின் கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல்! வளைகுடாவில் சேவை முடக்கம்?

அமெரிக்காவுக்குப் பதிலடி! குவைத், ஜோர்டான் மீதான ஈரானின் தாக்குதல் தீவிரம்!

ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்!

ஈரானின் மக்கள் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம்! - டிரம்ப் மிரட்டல்!
விடியோக்கள்

மேகதாது விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம்: அமைச்சர் நிர்மல் குமார்




