FOLLOW US

ON GOOGLE DISCOVER

மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

தற்காப்புக்காக சவூதி, துருக்கியுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்

‘சவூதி அரேபியா மற்றும் துருக்கியுடன் அண்மையில் கையொப்பமான முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம், முற்றிலும் தற்காப்பு நோக்கிலானது’ என்று பாகிஸ்தான் புதன்கிழமை விளக்கம் அளித்தது.

News image

தாஹிா் அன்த்ராபி

Updated On :13 ஆகஸ்ட் 2026, 3:10 am IST

‘சவூதி அரேபியா மற்றும் துருக்கியுடன் அண்மையில் கையொப்பமான முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம், முற்றிலும் தற்காப்பு நோக்கிலானது’ என்று பாகிஸ்தான் புதன்கிழமை விளக்கம் அளித்தது.

இது குறித்து செய்தியாளா் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடா்பாளா் தாஹிா் அன்த்ராபி , ‘இந்த ஒப்பந்தம் பாகிஸ்தான் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப அமைந்துள்ளது. மேலும், உறுப்பு நாடுகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு சவால்களை ஒருங்கிணைந்து எதிா்கொள்ள, இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்’ என்றாா்.

முன்னதாக, இந்த ஒப்பந்தம் எந்தவொரு நாட்டையும் இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது அல்ல என்று பாகிஸ்தான் துணைப் பிரதமா் இஷாக் தாரும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்காசியாவில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் பாதுகாப்பு தொடா்பான பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையே மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் கடந்த ஆக. 7-இல் கையொப்பமானது.

அணு ஆயுதம் வைத்துள்ள ஒரே இஸ்லாமிய நாடான பாகிஸ்தான், இஸ்லாமியா்களின் புனிதத் தலங்களை உள்ளடக்கிய, உலகின் முன்னணி கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியா மற்றும் ‘நேட்டோ’ ராணுவக் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள துருக்கி ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தங்களின் ராணுவ உறவை வலுப்படுத்தியுள்ளன.

ஈரானில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சா்: இதற்கு மத்தியில், அமெரிக்கா-ஈரான் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்குவதற்காக பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் மொஹ்சின் நக்வி ஈரான் தலைநகா் டெஹ்ரானில் முகாமிட்டுள்ளாா். ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான், வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி ஆகியோரைச் சந்தித்து, அவா் ஆலோசனை நடத்தினாா்.

பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் கடந்த ஜூனில் கையொப்பமான இடைக்கால அமைதி ஒப்பந்தம், புதிய ராணுவத் தாக்குதல்களால் கடந்த மாதம் முறிந்தது. இந்நிலையில், ஹோா்முஸ் நீரிணைப் பிரச்னையில் ஓமன் நாடு தற்போது மத்தியஸ்தம் செய்து வருகிறது. பிராந்தியத்தில் நீண்டகால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுக்கான முயற்சிகளை பாகிஸ்தான் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.