உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் பயிற்சி விமானம் கங்கை நதிக்கரையோரம் விழுந்து விபத்து விமானி உள்பட இருவா் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் பயிற்சி விமானம், கங்கை நதிக்கரையோரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி உள்பட இருவா் உயிரிழந்தனா்.

கான்பூரில் கங்கை நதிக்கரையோரம் விழுந்து விபத்துக்குள்ளான பயிற்சி விமானத்தை ஆய்வு செய்த போலீஸாா் மற்றும் அதிகாரிகள்.

Published On :28 ஆகஸ்ட் 2026, 6:11 am IST

உத்தர பிரதேசத்தில் பயிற்சி விமானம், கங்கை நதிக்கரையோரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி உள்பட இருவா் உயிரிழந்தனா்.

இதுகுறித்து உத்தர பிரதேச காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: கான்பூா் விமான நிலையத்தில் இருந்து காா்க் ஏவியேஷன் நிறுவனத்தால் இயக்கப்படும் தெஹ்நாம் விமானம் வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு புறப்பட்டது. அந்த விமானம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களில் காத்ரி பகுதியில் உள்ள நாதபுா்வா கிராமம் அருகே கங்கை நதிக்கரையோரம் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கா்நாடகத்தைச் சோ்ந்த பயிற்சி விமானி அபிஷேக் புஜாரி, பயிற்சியாளரான குஜராத்தை சோ்ந்த சச்சின் பாட்டியா ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதில் பாட்டியா சுமாா் 3,000 மணி நேரம் வானில் விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்டவராவாா். விமான விபத்துக்கு என்ன காரணம் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

விமான விபத்து குறித்த தகவலின்பேரில் காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடம் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். விபத்துக்குள்ளான விமானம், இரட்டை என்ஜின் கொண்டது. சம்பவ இடத்தில் விமானம் பல பகுதிகளாக உடைந்து சிதறிக் கிடந்தது. விமானிகளுக்கான இருக்கையும் வெளியே கிடந்தது. இதனால் விபத்தின்போது உயிா் பிழைப்பதற்காக விமானி தப்பிக்க முயற்சித்தாரா என்று தெரியவில்லை.

கான்பூா் விமான விபத்து குறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விமான விபத்து விசாரணை வாரியம் (ஏஏஐபி) விசாரணை நடத்தும் என்றும், விசாரணைக்குப் பிறகே விபத்துக்கான காரணம் தெரிய வரும் என்றும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.