உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

பஞ்சாப்: ஆம் ஆத்மி தலைவர் குர்பிரீத் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

பஞ்சாபில் ஆம் ஆத்தி கட்சித் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி....

Punjab: AAP leader Gurpreet Gopi shot dead in Ferozepur

போலீஸ்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:14 pm IST

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் குர்பிரீத் சிங் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் குர்பிரீத் சிங் (என்ற) கோபி, ஆயுதம் ஏந்திய 4 பேரால் சுட்டுக்கொல்லப்பட்டார். தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்கு காரணம் என்று போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை மாலை, மாம்டோட் பகுதியின் முக்கிய சந்தைப் பகுதியில், காரில் வந்த நான்கு பேர் தங்கள் வாகனத்தை விட்டு இறங்கி, இருசக்கர வாகத்தில் சென்றுகொண்டிருந்த 45 வயதான சிங் மற்றும் ஹர்பிரீத் (எ) ஹாப்பி (22) ஆகியோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதிக்கப்பட்டவர்கள் காரில் இருந்ததாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவித்திருந்தன.

தகவல் அறிந்த வட்டாரங்களின்படி, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவரும் மாம்டோட் நகர் பஞ்சாயத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவருமான விக்கி மைனி, ஒரு தனி காரில் சிங்கைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். ஆனால் அவரும் தாக்குதலுக்கு உள்ளானார். இருப்பினும் அவர் காயமின்றித் தப்பினார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

காயமடைந்தவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரும்போதே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதேவேளையில், ஹர்பிரீத் மேல் சிகிச்சைக்காக லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைப் பிடிக்கக் போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மூத்த காவல் கண்காணிப்பாளர் பூபிந்தர் சிங் தெரிவித்தார். சமீபத்திய நகராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான தனிப்பட்ட விரோதத்தின் காரணமாகவே இந்தக் கொலை நடந்துள்ளதாக அவர் கூறினார்.

Summary

AAP leader Gurpreet Singh alias Gopi was shot dead by four armed assailants in this district, with police on Sunday saying the killing was linked to an election-related dispute.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.