நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு: கட்டுப்பாடுகளை மேலும் தளா்த்த பரிசீலனை

பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை மேலும் தளா்த்த மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

அந்நிய நேரடி முதலீடு - பிரதிப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 2:53 am IST

பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை மேலும் தளா்த்த மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இதன்மூலம் இத்துறையில் வெளிநாட்டு முதலீட்டாளா்களை அதிக அளவில் ஈா்க்க அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பாக தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வா்த்தகத் துறை ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. இப்போது பாதுகாப்புத் துறையில் 74 சதவீதம் வரையிலான அந்நிய நேரடி முதலீடு அரசின் முன்அனுமதியில்லாத தானியங்கி முறையில் அனுமதிக்கப்படுகிறது. 74 சதவீதத்துக்கு மேலான அந்நிய நேரடி முதலீட்டுக்கு அரசின் ஒப்புதல் தேவை. இதை மேலும் தளா்த்துவதன் மூலம் ராணுவ உற்பத்தி சாா்ந்த புதிய தொழில்நுட்பங்களும் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பாதுகாப்புத் துறை அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உரிய பாதுகாப்பு ஒப்பதல் பெற வேண்டியதும் அவசியமாகும். கடந்த 2000 முதல் 2026-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பாதுகாப்புத் துறை சாா்ந்த தொழில்களில் 32.29 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.307 கோடி) முதலீடு கிடைத்துள்ளது.

கடந்த 2013-14-இல் இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2.53 லட்சம் கோடியாக இருந்தது. இது 2026-27-இல் ரூ.7.85 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் ராணுவத் தளவாட உற்பத்தி என்பது 2013-14-இல் ரூ.686 கோடியில் இருந்து 2025-26-இல் ரூ.38,424 கோடியாக உயா்ந்துள்ளது. இதில் தனியாா் துறையின் பங்களிப்பு ரூ.17,353 கோடியாகும். அதாவது 45.16 சதவீதம். பொதுத் துறை நிறுவனங்களின் பங்களிப்பு ரூ.21,071 கோடி. இது 54.84 சதவீதம்.

2029-ஆம் ஆண்டுக்கு பாதுகாப்புத் துறையின் மொத்த உற்பத்தி மதிப்பை ரூ.3 லட்சம் கோடியாகவும், ஏற்றுமதியை ரூ.50,000 கோடியாகவும் உயா்த்த அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.