எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

என் சகோதரர் ராகுலின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது? - முதல்வர் ஸ்டாலின்

சகோதரர் ராகுலின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளதைப் பற்றி...

News image

தமிழக முதல்வர் ஸ்டாலின் - ராகுல் காந்தி. - (கோப்புப்படம்)

Updated On :4 பிப்ரவரி 2026, 11:01 am IST

சகோதரர் ராகுலின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எட்டு எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று (பிப்.4) அமளியின்போது காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவர் ஓம் பிர்லா இருக்கையை நோக்கி வீசியதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம். பி. சு.வெங்கடேசன் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதற்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதில், காங்கிரஸ் எம்.பி.க்களான குா்ஜீத் சிங் அஜ்லா, ஹிபி ஈடன், சி.கிரண் குமார் ரெட்டி, அமரீந்தர் சிங் வாரிங், பிரசாந்த் படோல், டீன் குரியகோஸ் ஆகியோர் மீதும் இடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப். 2 ஆம் தேதி வரை இரு கட்டங்களாக நடைபெறவிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புகளையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுதொடபாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவரும் எனது சகோதரருமான ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?

அவையின் உறுப்பினர்களுக்குப் பதிலளிக்க மத்திய அரசு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான கேள்விகளை அரசு தெளிவுபடுத்த வேண்டும். எட்டு எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து பேச அவர்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுக்கும் வகையில் மீதான இடைநீக்க நடவடிக்கை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Chief Minister Stalin has questioned why the BJP is afraid of Brother Rahul's questions. He also expressed strong condemnation of the suspension of the eight MPs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.