திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மக்களவை ஒத்திவைப்பு! நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்!

நாடாளுமன்றத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் போராட்டம்...

News image

நாடாளுமன்றத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் போராட்டம்

Updated On :4 பிப்ரவரி 2026, 12:02 pm IST

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், பகல் 1 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்களின் இடைநீக்கத்துக்கு கண்டனம் தெரிவித்து இன்று காலை மக்களவை கூடியவுடன் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகளை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

இதனிடையே, நாடாளுமன்றத்துக்கு வளாகத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட தமிழக எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 பேரும், பிரதமர் மோடி சமரசத்துக்கு உள்ளாகிவிட்டார் என்ற பதாகையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களின் போராட்டத்துக்கு நேரில் சென்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்தார்.

Summary

Lok Sabha adjourned! MPs protest in Parliament!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.