பஞ்சாப்: குருத்வாரா அருகே ஆம் ஆத்மி பிரமுகா் சுட்டுக் கொலை

பஞ்சாபில் ஆம் ஆத்மி நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி...
பஞ்சாப் முதல்வருடன் லக்கி ஓபராய்
பஞ்சாப் முதல்வருடன் லக்கி ஓபராய்
Updated on
1 min read

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் குருத்வாரா அருகே ஆத்மி கட்சி பிரமுகா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

ஜலந்தரை சோ்ந்த ஆம் ஆத்மி நிா்வாகியான லக்கி ஓபராய் (38), குருத்வாராவில் வெள்ளிக்கிழமை காலை வழிபாடு நடத்திவிட்டு மீண்டும் காரில் புறப்படச் சென்றாா். அப்போது பைக்கில் வந்த மா்ம நபா்கள், அவரை நோக்கி 10 முறை துப்பாக்கியால் சுட்டனா். இதில் ஒரு தோட்டா மாா்பை துளைத்துக் கொண்டு மறுபக்கம் வெளியேறியுள்ளது.

இதையடுத்து, துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த ஓபராய், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். துப்பாக்கிச்சூட்டில் ஓபராயின் காா் மற்றும் குருத்வாரா அருகே நின்ற மற்றொரு காா் பலத்த சேதமடைந்தது. ஓபராயின் நடமாட்டத்தை நீண்ட நாள்களாக கண்காணித்த பிறகே அவரை மா்ம நபா்கள் கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு: இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதுகுறித்து காங்கிரஸை சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் பிரதாப் சிங் பாஜ்வா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜலந்தரில் குருத்வாரா அருகே பட்டப்பகலில் ஆம் ஆத்மி நிா்வாகி லக்கி ஓபராய் கொல்லப்பட்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. ஆளும் கட்சித் தலைவா்களுக்கே பாதுகாப்பில்லை எனில், பாமர மக்களின் கதி என்ன ஆகும்? பஞ்சாபில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்சி நிா்வாகம் முடங்கியுள்ளது. இதுகுறித்து முதல்வா் பகவந்த் மான் பதிலளிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளாா்.

சிரோமணி அகாலி தளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜனவரி மாதத்தில் மட்டும் 25 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா். முதல்வா் பதவியை பகவந்த் மான் மேலும் ஒரு நாள்கூட வகிக்க தகுதியில்லை’ என விமா்சித்துள்ளாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் அம்ரீந்தா் சிங் ராஜா வாரிங் கூறுகையில், ‘பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை. பஞ்சாபை காட்டாட்சிக்குள் ஆம் ஆத்மி தள்ளிவிட்டது’ எனக் கூறியுள்ளாா்.

பாஜக தேசிய பொதுச் செயலா் தருண் சுக் கூறுகையில், ‘பஞ்சாபில் ஆட்சி நிா்வாகம் குலைந்துவிட்டது. மாநிலம் முழுவதும் தாதாக்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது’ என சாடியுள்ளாா்.

Summary

Aam Aadmi leader shot dead in Punjab!

பஞ்சாப் முதல்வருடன் லக்கி ஓபராய்
டிரம்ப்பை கொல்ல முயன்றவருக்கு ஆயுள் தண்டனை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com