மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

6 ஆண்டுகளில் 39 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல்: மத்திய உள்துறை அமைச்சகம்

நாடு முழுவதும் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 39 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தகவல்

News image

போதைப் பொருள் - ENS

Updated On :11 பிப்ரவரி 2026, 4:27 pm IST

நாடு முழுவதும் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 39 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 2020 முதல் 2025 நவம்பர் வரையில், 38.89 லட்சம் கிலோ கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2020-ல் 5.88 லட்சம் கிலோ போதைப் பொருள்களும், அதிகபட்சமாக 2021-ல் 8.16 லட்சம் கிலோ, 2022-ல் 7.22 லட்சம் கிலோ, 2023-ல் 6.32 லட்சம் கிலோ, 2024-ல் 5.4 லட்சம் கிலோ என்று குறைந்த நிலையில், மீண்டும் 2025-ல் 5.89 லட்சம் கிலோவாக அதிகரித்தது.

கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்களில் ஒடிஸா முதலிடத்தில் உள்ளது. ஒடிஸாவில் மட்டும் 6 ஆண்டுகளில் 10.65 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 27 சதவிகிதத்துக்கும் அதிகம்.

மேலும், ராஜஸ்தானில் 2020-ல் 14,826 கிலோ பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2025-ல் 58,146 கிலோவாக உயர்ந்தது. மேற்கு வங்கத்திலும் 2020-ல் 25,979 கிலோ என்ற நிலையிலிருந்து, 2025-ல் 32,456 கிலோ என்ற அதிகரித்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் 2021-ல் 2.01 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதிலிருந்து, 2025-ல் 44,182 கிலோவாக கணிசமாகக் குறைந்துள்ளது.

தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டவிரோத போதைப்பொருள் தடைச் சட்டத்தின்கீழ் எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. மேலும், நாடுகடந்த போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க, அண்டை நாடுகள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களுடனான சர்வதேச ஒத்துழைப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

Summary

39 lakh kg cannabis based drugs seized across India since 2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.