சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

மணிப்பூரில் மீண்டும் கலவரம் : 5 நாள்களுக்கு இணைய சேவை துண்டிப்பு!

பாஜக தலைமையில் புதிய ஆட்சி அமைந்த பிறகும் பழங்குடி சமூகத்தினரிடையே மோதல்போக்கு அதிகரித்து வருவது குறித்து...

கலவரத்தில் தீக்கிரையான வீடுகள் - படம் - ஏஎன்ஐ

Published On :

மணிப்பூரில் குகி - நாகா பழங்குடி சமூகத்தினரிடையே மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளதால், அடுத்த 5 நாள்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டு, பாஜக தலைமையில் புதிய ஆட்சி அமைந்த சில நாள்களில் பழங்குடி சமூகத்தினரிடையே மீண்டும் மோதல்போக்கு அதிகரித்து வருகிறது.

மணிப்பூரின் உக்ருல் பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் குகி இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதனிடையே உக்ருலில் உள்ள லிட்டன் சரேய்கோங் கிராமத்தில் குகி - நாகா இன மக்களிடையே மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் கிராமத்தைச் சேர்ந்த 10 வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் குகி - மைதேயி சமூகத்தினரிடையே முன்பு கலவரம் ஏற்பட்டதால் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தப்படவில்லை. பாதுகாப்புப் படையினரும் திரும்பப் பெறப்படவில்லை. இதற்கு மத்தியில் நாகா - குகி இன மக்கள் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

நாகா இனத்தைச் சேர்ந்த ஒருவர் பிப்ரவரி 7 ஆம் தேதி தாக்கப்பட்டு, அவரின் வீடு தீயிட்டு எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த கலவரம் ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆயுதம் ஏந்திய நபர்கள் வீடுகளை தீயிட்டு எரித்ததாகவும், துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை மேலும் மோசமாக வாய்ப்புள்ளதால், நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் களத்தில் இறங்கியுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

மேலும் பதற்றம் அதிகரிக்காமல் தடுக்கும் வகையில் உக்ருல் மாவட்டத்தில் அடுத்த 5 நாள்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

Summary

Manipur Ukhrul violence tensions between Kuki-Zo and Tangkhul Naga

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.