எச் 125 ஹெலிகாப்டர் தயாரிப்பை தொடக்கி வைத்த மோடி - மேக்ரான்!

எவரெஸ்ட் சிகரங்களில் ராணுவ நடவடிக்கைகளின்போது எச் 125 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும்.
Prime Minister Narendra Modi with French President Emmanuel Macron
ஹெச் 125 ஹெலிகாப்டர் உற்பத்தியை இணைந்து தொடக்கிவைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான்படம் - பிடிஐ
Updated on
2 min read

கர்நாடகத்தில் எச் 125 ஹெலிகாப்டர் தயாரிப்பை இறுதி அசெம்ளியை பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானும் இணைந்து இன்று (பிப். 17) தொடக்கி வைத்தனர்.

டாடா குழுமத்தின் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் லிமிடெட் மற்றும் ஏர்பஸ் இணைந்து தயாரிக்கும் இந்த எச் 125 ஹெலிகாப்டர், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.

தில்லி பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்கம் தொடா்பான ஏஐ உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. பிப். 20 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், 20 நாடுகளுக்கும் மேற்பட்ட தலைவர்கள், 60 அமைச்சர்கள், 500 உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின்பேரில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், பிரேஸில் அதிபா் லூலா டாசில்வா, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரஸ் உள்பட 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இமானுவல் மேக்ரானுடன் சந்திப்பு

ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மூன்று நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு வருகைப் புரிந்துள்ள இமானுவல் மேக்ரானை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 17) மும்பையில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு, வணிகம் உள்ளிட்ட துறைகள் சாா்ந்த ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும், பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் நிலவும் பிரச்னைகள் குறித்துப் பேசவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தையின்போது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்பட பிரான்ஸ் நாட்டு உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

எச் 125 ஹெலிகாப்டர் உற்பத்தி

இதனைத் தொடர்ந்து, கர்நாடகத்தின் வெமகல் பகுதியில் டாடா குழுமத்தின் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் லிமிடெட் மற்றும் ஏர்பஸ் இணைந்து தயாரிக்கும், எச் 125 ஹெலிகாப்டர் உற்பத்தியின் இறுதி அசெம்ளியை பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானும் இணைந்து தொடக்கி வைத்தனர்.

இந்த எச் 125 ஹெலிகாப்டர், பொது பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் இலகு ரக ஹெலிகாப்டர்களின் தேவையை பூர்த்தி செய்யும். எவரெஸ்ட் சிகரங்களில் ராணுவ நடவடிக்கைகளின்போது எச் 125 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும்.

டாடாவும் ஏர்பஸும் இணைந்து ராணுவ நடவடிக்கைகளுக்கான பிரத்யேகமாக எச் 125எம் என்ற இலகு ரக ஹெலிகாப்டர்களை தயாரித்து வருகிறது. இவை எச் 125 ஹெலிகாப்டர்களில் இருந்து சற்று மாறுபட்டதாக ராணுவ சூழல்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

பிரான்ஸும் இந்தியாவும் இணைந்து இந்தியாவில் தயாரிக்கும் இந்த எச் 125 ஹெலிகாப்டர்கள் 2027-ல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என டாடா அறிவித்துள்ளது.

Prime Minister Narendra Modi with French President Emmanuel Macron
மும்பை சாலையில் நடைப்பயிற்சி செய்த பிரான்ஸ் அதிபர்!
Prime Minister Narendra Modi with French President Emmanuel Macron
பாதுகாப்பு, திறன் மேம்பாடு, செய்யறிவு.. இந்தியா - பிரான்ஸ் இடையே 20 ஒப்பந்தங்கள் கையொப்பம்!
Summary

India, France to jointly make H125 helicopters capable of flying to Mount Everest heights

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com