ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர வனப்பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தகவலைத் தொடர்ந்து, சத்ரூ காடுகளில் பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.
அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றிவளைக்கப்பட்ட பகுதிக்கு கூடுதல் படைகள் விரைந்துள்ளன என்று அவர்கள் மேலும் கூறினர்.
பனியால் சூழப்பட்ட சத்ரூ வனப்பகுதியில் கடந்த மாதம் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே 5க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சண்டைகள் நடந்தன. இந்த சண்டைகளில் வீரர் மற்றும் ஒரு பயங்கரவாதி பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The gunfight started when army troops launched a search operation in Chatroo forests following information about the presence of two suspected terrorists.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜம்மு காஷ்மீரில் முதல் திரைப்பட விழா..! 50 நாடுகளில் இருந்து 875 படங்கள்!

ஜம்மு - காஷ்மீரில் பலத்த மழை: திடீர் வெள்ளத்தில் சிக்கி 11பேர் பலி, பலர் மாயம்

ஜம்மு - காஷ்மீா்: லஷ்கா் பயங்கரவாத கமாண்டா் சுட்டுக் கொலை

ஜம்மு - காஷ்மீரில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; நால்வா் காயம்
விடியோக்கள்

அனுபவம் இல்லையா? அக்கறையில்லையா?: முதல்வரை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார் | ADMK | TVK




