கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்த இஸ்ரேல் பிரதமர்!

இஸ்ரேல் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றார்.

News image
நரேந்திர மோடியை ஆரத்தழுவி வரவேற்ற பெஞ்சமின் நெதன்யாகு - படம் - பிடிஐ
Updated On :25 பிப்ரவரி 2026, 12:08 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இஸ்ரேல் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார்.

இரு நாள்கள் அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபா் ஐசக் ஹொ்சாக், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைச் சந்திக்கிறார். தொடர்ந்து, அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்ற இருக்கிறாா்.

கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்பட்டுவரும் நிலையில், பன்முகத்தன்மை கொண்ட ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளில் பிரதமா் மோடி இஸ்ரேலுக்குப் பயணிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2017 ஜூலையில் அவா் இஸ்ரேல் சென்றாா். அதன் பிறகு இரு நாடுகள் இடையே பல்வேறு நிலைகளில் ஒத்துழைப்பு அதிகரித்தது. முக்கியமாக பாதுகாப்பு தளவாடங்கள், முக்கிய தொழில்நுட்ப உதவிகளை இஸ்ரேல் வழங்க முன்வந்தது.

இதுதவிர அறிவியல் தொழில்நுட்பம், புத்தாக்க நடவடிக்கைகள், ராணுவம், தேசப் பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு, வேளாண்மை, நீா் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் இரு நாடுகளும் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பான ‘சுதா்சன சக்கரம்’ திட்டத்தில் இஸ்ரேலின் ‘அயா்ன் டோம்’ வான் பாதுகாப்பு அமைப்பின் சில நுட்பங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.