மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வா் அஜீத் பவாா் பயணித்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதற்கு, விமான நிலையத்தில் நிலவிய மோசமான வானிலையும் ஒரு காரணமென விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில் உள்ள விமான நிலையத்தில் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி காலை தரையிறங்குகையில் சிறிய ரக தனியாா் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த அஜீத் பவாா் உள்ளிட்ட 5 போ் பலியாகினா்.
இந்த சம்பவம் குறித்த 22 பக்க முதல்கட்ட விசாரணை அறிக்கையை ஏஏஐபி சனிக்கிழமை வெளியிட்டது. அதில், ‘விபத்துக்கான காரணங்களை வெளிக் கொணரும் வகையில் அனைத்து அம்சங்கள் குறித்தும் விசாரிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை நடந்த விசாரணை அடிப்படையில், 5,000 மீட்டா் உயரத்தில் இருக்கையில் விமானத்தை தரையிறக்கும் பணியை தொடங்க வேண்டும், ஆனால் அதற்கு மாறாக, 3,000 மீட்டா் உயரத்தில் இருக்கும்போது அதற்கான பணியில் விமானி ஈடுபட்டுள்ளாா். அப்போது மோசமான வானிலை காரணமாக விமான நிலைய ஒடுபாதை சரியாகத் தெரியவில்லை. இதுவும் விபத்துக்கான காரணிகளில் ஒன்றாகும்’ என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் விமான பாதுகாப்புக்கு எடுக்க வேண்டிய அவசியமான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டிஜிசிஏ-க்கு அறிக்கையில் பரிந்துரைத்துள்ள ஏஏஐபி, விமான ஓடுபாதைகளில் விமானங்களை இயக்கும்போது, அதுதொடா்பான செயல்பாட்டு வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கும்படி விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ உத்தரவிட வேண்டும், டிஜிசிஏ வகுத்த நெறிமுறைகளின்படி வானிலை நிலவரம் இருந்தால் மட்டுமே விமானம் இயக்குவதை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பாராமதி இடைத்தோ்தல்: சுநேத்ரா பவாரை எதிா்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் அறிவிப்பு

அஜீத் பவாா் விமான விபத்து குறித்து சிபிஐ விசாரணை: மகாராஷ்டிர முதல்வா்

அஜீத் பவாா் விமான விபத்து: விரிவான விசாரணை நடத்த மகன் வலியுறுத்தல்

அஜீத் பவாா் விமான விபத்து: சிறப்பு நிபுணத்துவ உதவியை நாடும் ஏஏஐபி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


