மும்பை: 18 மாடி குடியிருப்பு கட்டடத்தில் திடீர் தீ விபத்து

மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள 18 மாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பீதி நிலவியது.
மும்பை: 18 மாடி குடியிருப்பு கட்டடத்தில் திடீர் தீ விபத்து
ANI
Updated on
1 min read

மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள 18 மாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பீதி நிலவியது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள 18 மாடி குடியிருப்புக் கட்டடத்தில் சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்டது. முதல் மாடியில் இருந்து நான்காவது மாடி வரை தீப்பிழம்புகள் பரவியதால் கட்டடத்திற்குள் அடர்ந்த புகை பரவியது.

தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் இருந்து ஒன்பது குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அதே நேரத்தில் 18 பேர் படிக்கட்டு வழியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

புகையை சுவாசித்து பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மாலை 4.35 மணியளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இருப்பினும் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதேசமயம் தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

மூன்று மணி நேரத்திற்குள் தீ அணைக்கப்பட்டதாக தீயணைப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

As many as 27 persons were rescued after a fire broke out at an 18-storey residential building in Mumbai's Andheri area on Saturday afternoon, civic officials said.

மும்பை: 18 மாடி குடியிருப்பு கட்டடத்தில் திடீர் தீ விபத்து
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் பலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com