

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்தது இந்தியாவை பாதிக்குமா என வெனிசுவேலாவுக்கான முன்னாள் இந்திய தூதர் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து, வெனிசுவேலாவுக்கான முன்னாள் இந்திய தூதரான ஆர். விஸ்வநாதன் கூறுகையில், "இது ஒன்றும் ஆச்சரியமல்ல. அவர் (டிரம்ப்) அச்சுறுத்தியது இது முதல்முறையல்ல. அவர் முதல்முறையாக அதிபராக இருந்தபோதே வெனிசுவேலாவை அச்சுறுத்தினார்.
இந்த முறை, போர்க்கப்பல்கள் மற்றும் சிஐஏ-வையும் அனுப்பியுள்ளார். ஆனால், அது இந்தியாவை பாதிக்காது.
எண்ணெய்க்காக நாம் வெனிசுவேலா சார்ந்திருக்கவில்லை. வெனிசுவேலாவுடன் நம் வர்த்தகம் மிகக் குறைவு. அவர்களின் எண்ணெய் வயல்களில் சில முதலீடுகளை மட்டுமே கொண்டுள்ளோம். எனவே, இது இந்தியாவை பெரிய அளவில் பாதிக்கப் போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.