

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பலவீனப்படுத்துவதுதான் விபி ஜி ராம் ஜி என்று காங்கிரஸ் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியுள்ளார்.
செய்தியாளர்களுடன் காங்கிரஸ் செயலாளர் கே.சி. வேணுகோபால் பேசுகையில் "வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்தின் நோக்கம், நாட்டின் மிகவும் வெற்றிகரமான மற்றும் தேவைசார்ந்த வறுமை ஒழிப்புத் திட்டங்களில் ஒன்றான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பலவீனப்படுத்துவதே.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஆண்டுதோறும் 5 முதல் 6 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்தது, பட்டினி மற்றும் புலம்பெயர்தலைக் குறைத்தது. குளங்கள், சாலைகள், கால்வாய்கள், தடுப்பணைகளை உள்ளிட்ட சொத்துகளை உருவாக்கியது.
வறட்சி, வெள்ளம், கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின்போது, ஒரு முக்கியமான பாதுகாப்பு வளையமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்பட்டது. பெண்கள், பழங்குடியினர் மற்றும் ஆதிவாசிகளுக்கும் பெரும் உதவியாக இருந்தது.
ஆனால், இனிமேல் விபி ஜி ராம் ஜி திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு ஓர் உரிமை அல்ல; தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு மட்டுமே வேலை வரையறுக்கப்பட்டுள்ளது.
நிதி வரவும் வரம்புக்கு உட்பட்டது - ஒருமுறை தீர்ந்துவிட்டால், வேலை நிறுத்தப்பட்டு விடும். இது வேலை செய்வதற்கான சட்ட உரிமையை அமைதியாகக் கொல்கிறது" என்று தெரிவித்தார்.
மேலும், விபி ஜி ராம் ஜி-க்கு எதிராக ஜன. 5-ல் நாடுதழுவிய போராட்டத்தையும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அறிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.