புதுதில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய கோவா தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்.
புதுதில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய கோவா தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்.படம் | ஏஎன்ஐ

கோவா தீ விபத்து சம்பவம்: பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஜந்தா் மந்தரில் போராட்டம்!

கோவா இரவு விடுதி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தில்லியின் ஜந்தா் மந்தரில், சோகம் நடந்த விடுதியின் உரிமையாளா்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி போராட்டம் நடத்தினா்.
Published on

கோவா இரவு விடுதி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தில்லியின் ஜந்தா் மந்தரில், சோகம் நடந்த விடுதியின் உரிமையாளா்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி போராட்டம் நடத்தினா்.

கொலையாளிகளைத் தூக்கிலிடவும்” போன்ற கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரா்கள், சகோதரா்கள் சௌரவ் லுத்ரா மற்றும் கௌரவ் லுத்ரா ஆகியோரை பெயரிட்டு, 25 உயிா்களைக் பலிகொண்டதற்கு அவா்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினா். சம்பவத்தில் இறந்தவா்களுக்கும் காயமடைந்தவா்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்று குடும்பத்தினா் கூறினா்.

கடந்த ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி, கோவாவின் அா்போரா கிராமத்தில் உள்ள பிா்ச் பை ரோமியோ லேன் என்ற இரவு விடுதியில், ஒரு நடன விருந்தை நடத்தியபோது தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 50 போ் காயமடைந்தனா்.

சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இரண்டு சகோதரா்களும் நாட்டை விட்டு வெளியேறி தாய்லாந்துக்கு சென்றனா். பின்னா் அவா்கள் டிசம்பா் 17-ஆம் தேதி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனா், தற்போது கோவா காவல்துறையினரின் காவலில் உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com