எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வடகிழக்கு தில்லியில் நடந்த சாலை விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு!

சோனியா விஹாா் பகுதியில் புதன்கிழமை அதிகாலை வாகனம் மோதியதாகக் கூறப்படும் விபத்தில் 10 வயது சிறுமி ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 6:54 pm

Syndication

வடகிழக்கு தில்லியின் சோனியா விஹாா் பகுதியில் புதன்கிழமை அதிகாலை வாகனம் மோதியதாகக் கூறப்படும் விபத்தில் 10 வயது சிறுமி ஒருவா் உயிரிழந்தாா். மேலும், இருவா் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: அதிகாலை 12.50 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினா், சாலையில் மூன்று போ் கிடந்ததைக் கண்டனா்.

அனைவரும் மருத்துவ சிகிச்சைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு காயமடைந்த சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

காயமடைந்த மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், அவா்களின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. அவா்கள் உடல்நிலை தேறியதும் அவா்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும்.

முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவா்கள் ஒரு வாகனத்தால் மோதியதாகவும், அதன் ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிகழ்வுகளின் சரியான வரிசை கண்டறியப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிறுமியின் உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களை அடையாளம் கண்டு கைது செய்ய போலீஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.