

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ”இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது, வெனிசுவேலாவில் சமீபத்திய நடவடிக்கைகள் கவலையளிக்கிறது.
வெனிசுவேலா மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்புக்கு இந்தியா தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
வெனிசுவேலாவின் அமைதி மற்றும் ந்லைத்தன்மையை உறுதிசெய்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளை அமைதியான முறையில் தீர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைக்கிறோம்.
மேலும், வெனிசுவேலாவில் உள்ள இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியத் தூதரகம் வழங்கும்“ என்று தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், வெனிவேசுலா அதிபர் மதுரோவை கைது செய்த அமெரிக்காவை வெளிப்படையாக இந்தியா குறிப்பிடவில்லை.
வெனிசுவேலாவிலிருந்து போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீண்ட காலமாகக் குற்றஞ்சாட்டி வந்தநிலையில், வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சனிக்கிழமையில் (ஜன. 3) அமெரிக்க படை கைது செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.