முன்னாள் மத்திய இணையமைச்சர் கபீந்திர புர்காயஸ்தா காலமானார்! பிரதமர் இரங்கல்!

வாஜ்பாயின் அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராகப் பதவி வகித்த கபீந்திர புர்காயஸ்தா காலமானார்....
முன்னாள் மத்திய இணையமைச்சர் கபீந்திர புர்காயஸ்தா (கோப்புப் படம்)
முன்னாள் மத்திய இணையமைச்சர் கபீந்திர புர்காயஸ்தா (கோப்புப் படம்)எக்ஸ்
Updated on
1 min read

முன்னாள் மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் கபீந்திர புர்காயஸ்தா காலமானார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான கபீந்திர புர்காயஸ்தா (வயது 94) வயது மூப்பினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி முன்னாள் மத்திய இணையமைச்சர் கபீந்திர புர்காயஸ்தா இன்று (ஜன. 7) காலமானதாக, அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, கபீந்திர புர்காயஸ்தாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இரண்டு முறை சில்சார் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கபீந்திர புர்காயஸ்தா, கடந்த 1998 முதல் 99 வரையிலான முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் இணையமைச்சராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் மத்திய இணையமைச்சர் கபீந்திர புர்காயஸ்தா (கோப்புப் படம்)
ஜார்க்கண்டில் 2 நாள்களில் 13 பேரைக் கொன்ற காட்டு யானை!
Summary

Former Union Minister of State for Communications, Kabindra Purkayastha, has passed away.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com