

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒற்றைக் காட்டு யானையின் வெவ்வேறு தாக்குதல்களில் 2 நாள்களில் 13 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், மதம் பிடித்த ஒற்றைக் காட்டு யானை, செவ்வாய்க்கிழமை (ஜன. 6) நோவாமுண்டி மற்றும் ஹட்கம்ஹாரியா காவல் நிலையங்களின் பகுதிகளுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்தக் காட்டு யானையின் தாக்குதலில் அப்பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்தக் காட்டு யானை, கடந்த ஜன.5 ஆம் தேதி கோல்ஹான் பகுதியில் 7 பேரைக் கொன்றதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர். இத்துடன், அந்த யானையின் தாக்குதலில் இதுவரை 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, அந்த யானையை மீண்டும் காட்டுக்குள் துரத்தும் நடவடிக்கைகளை மேற்கு வங்கத்தின் பங்குரா வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும், ஒற்றைக் காட்டு யானை மனிதர்களைத் தாக்கி வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.